என்னது இது..? அதிர்ந்து போன ராஷ்மிகா…வைரலாகும் வீடியோ.!
நடிகை ராஷ்மிகா எப்போதும் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்கள் அல்லது வேடிக்கையான வீடியோக்களை வெளியீட்டு சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட கரு நிற உடையில் சில புகைப்படங்களை வெளியீட்டு இருந்தார்.
அதனை தொடர்ந்து தற்போது தனது ட்வீட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வீடியோவில் , உணவை விநியோகம் செய்யும் பிரபல நிறுவனமான “mcdonalds” நிறுவனம் ராஷ்மிகா மந்தனாவுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
Ordered a burger and got an hourglass…. @mcdonaldsindia what does this mean? ????????#Partnership pic.twitter.com/FznEZDTpsl
— Rashmika Mandanna (@iamRashmika) March 29, 2023
ராஷ்மிகா, பர்கரை ஆர்டர் செய்துள்ளார். ஆனால், மணி நேர கண்ணாடி டெலிவரி செய்யப்பட்டுள்ளது. பர்கரை ஆர்டர் செய்துவிட்டு அதற்காக ஆவலுடன் எதிர்பார்த்து பார்சலை பிரித்தவர் ஏமாற்றத்துடன், சற்று அதிர்ச்சியானார். மேலும் இதற்கு என்ன அர்த்தம் என கேள்வி எழுப்பியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் வாரிசு திரைப்படத்தின் வெர்ரியை தொடர்ந்து அடுத்ததாக அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புஷ்பா 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.