தீண்டாமை கொடுமை; தியேட்டரிலும் அனுமதி மறுப்பு… எழும் கண்டனங்கள்.!

Default Image

ரோகிணி திரையரங்கில் டிக்கெட் வைத்திருந்தும் ‘பத்து தல’ படத்தை பார்க்க வந்த நரிக்குறவர்களுக்கு அனுமதிக்க மறுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. 

சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் சிம்பு நடிப்பில் இன்று வெளியான ‘பத்து தல’ படத்தின் முதல் காட்சிக்கு, நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த இருவர் டிக்கெட் எடுத்து திரையரங்கிற்குள் வந்துள்ளனர். ஆனால், டிக்கெட் இருந்தும்  இருவரை ரோகிணி திரையரங்க ஊழியர்கள் உள்ளே விட மறுத்துள்ளனர்.

பிறகு அவர்களின் அருகில் இருந்த ரசிகர்கள் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில். பலரும் இது மிகவும் தவறான செயல் அவர்களும் மனிதர்கள் தான் மனிதர்களை மனிதர்களாக மதியுங்கள் மண்ணிலே ஈரம் உண்டு நெஞ்சினில் காயம் உண்டு எங்கே போனாலும் யார் என்ன சொன்னாலும் உனக்கான நீதி கண்டிப்பாக கிடைக்கும் இன்னும் சற்று நேரத்தில்” என கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

இதனையடுத்து, இவ்விவகாரம் நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்ததும் அவர்கள் படம் தொடங்குவதற்கு முன்பே சரியான நேரத்திற்கு உள்ளே அனுமதிக்கப்பட்டனர் எனவும்  சென்னை ரோஹினி திரையரங்க உரிமையாளர் நிகிலேஷ் சூர்யா விளக்கம் கொடுத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

LIVE NEWS TAMIL
chicken pox (1)
orange alert tn
CSK Squad
Red Alert TN
Fengal Cyclone
Aavin milk - Heavy rain