புற்றுநோய் சிகிச்சை மருந்து இறக்குமதி; முழு வரிவிலக்கு- மத்திய அரசு.!
புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு முழுமையாக வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அறியவகை நோய்களுக்கான சிகிச்சை பெறும் பயனாளர்களுக்கு, இனி வெளிநாடுகளிலிருந்து மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு முழு வரிவிலக்கு அளித்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் பெம்ப்ரோலிசுமாப் உள்ளிட்ட மருந்துகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய முழுமையாக வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தவகை மருந்துகள் தேவைப்படும் பயனாளர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட, மத்திய சுகாதார ஆய்வாளர்களிடம் சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்கும் போது, இந்த முழுவரிவிலக்கு அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. இதுவரை வெளிநாடுகளிலிருந்து குறிப்பிட்ட மருந்துகளை இறக்குமதி செய்ய மத்திய அரசு, சில வரிகளை விதித்திருந்தது, தற்போது முழுவரிவிலக்கு அளித்து மத்திய அரசு அரசாணை அறிவித்துள்ளது.