ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் குறித்து, கவனத்தில் ஜெர்மன் வெளியுறவு அமைச்சகம்.!
ராகுல் காந்தியின் பதவி நீக்கம் குறித்து, கவனத்தில் கொண்டுள்ளதாக ஜெர்மன் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2019 ஆம் ஆண்டு தேர்தல் பரப்புரையில் ராகுலின், மோடி குடும்பப்பெயர் குறித்த கருத்துக்கு எதிராக, ராகுல் மீது தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து ராகுலின் எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
ராகுல் காந்தியின் தகுதிநீக்கம் குறித்து அவருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் முடிவை, அரசாங்கம் கவனத்தில் கொண்டுள்ளதாக ஜெர்மனி வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நீதித்துறை சுதந்திரம் மற்றும் அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகள், ராகுல் காந்திக்கு எதிரான வழக்கில் பொருந்தும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என ஜெர்மனியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இந்த வழக்கு நீடிக்குமா அல்லது, அவரது பதவிநீக்கத்திற்கு அடிப்படை ஏதும் உள்ளதா என்பது பின்னர் தெளிவாகிவிடும் என அவர் மேலும் தெரிவித்தார். முன்னதாக இந்திய நீதிமன்றங்களில் ராகுலின் வழக்கை, அமெரிக்கா கண்காணித்து வருகிறது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் கூறியதைத் தொடர்ந்து, ஜெர்மன் வெளியுறவு அமைச்சகத்தின் கருத்துக்கள் வெளிவந்துள்ளன.