ஆவின் பால் அனுப்ப தாமதம் – அதிகாரியை சஸ்பெண்ட் செய்து அமைச்சர் உத்தரவு!
சென்னை அம்பத்தூரில் ஆவின் பால் விநியோகம் தாமதமான விவகாரத்தில் 2 அதிகாரிகள் மீது நடவடிக்கை.
சென்னை அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் இயந்திரக் கோளாறு காரணமாக சில பகுதிகளுக்கு பால் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக 2 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். இயந்திர பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் உதவி பொது மேலாளர் (பொறியியல்) தற்காலிக பணிநீக்கம் (சஸ்பெண்ட்)செய்யப்பட்டுள்ளார்.
இதுபோன்று, தர உறுதி பணிகளை மேற்கொள்ளும் உதவி பொது மேலாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்றும் பால் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தவும் உத்தரவிட்டு உள்ளதாகவும் அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். மேலும், உரிய நேரத்தில் பால் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார்.