நடிகர் அஜித்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதல் கூறிய ஈபிஎஸ்..!
அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அவர்கள் தேர்வு செய்யப்பட்டதற்கு நடிகர் அஜித்குமார் அவர்கள் வாழ்த்து
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான அஜித்குமார் அவர்கள் தந்தை சுப்பிரமணியன் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
இவரது மறைவுக்கு சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நடிகர் அஜித்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார்.
அப்போது அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அவர்கள் தேர்வு செய்யப்பட்டதற்கு நடிகர் அஜித்குமார் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.