இந்தியா ஜனநாயகத்தின் தாய் – பிரதமர் நரேந்திர மோடி
இந்தியா உண்மையிலேயே ஜனநாயகத்தின் தாய் என பிரதமர் மோடி பேச்சு.
ஜனநாயகத்தின் இரண்டாவது உச்சி மாநாட்டை தென்கொரியா நடத்தியது. இந்த மாநாட்டில் நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். பிரதமர் மோடி அவர்கள் காணொளி வாயிலாக கலந்து கொண்டார்.
பிரதமர் மோடி பேச்சு
இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி அவர்கள் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தலைவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் முறை உலகில் மற்ற நாடுகளில் ஏற்படுவதற்கு முன்பதாகவே பண்டைய இந்தியாவில் காணப்பட்டது.
பண்டைய இந்தியாவில் குடியரசு மாநிலங்கள் இருந்ததற்கான பல வரலாற்று குறிப்புகள் உள்ளது. அங்கு ஆட்சியாளர்கள் வாரிசு அடிப்படையில் இல்லை. இந்தியா உண்மையிலேயே ஜனநாயகத்தின் தாய். ஜனநாயகம் என்பது ஒரு அமைப்பு மட்டும் அல்ல, அது ஒரு உணர்வு.
அது ஒவ்வொரு மனிதனின் தேவைகள் மற்றும் ஆசைகளும் சம அளவில் முக்கியமானது என்பதை அடிப்படையாகக் கொண்டது. உலகளாவிய சவால்கள் பல இருந்தாலும் இன்று பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடாக இந்தியா காணப்படுகிறது. இதுவே உலகில் ஜனநாயகத்திற்கு மிக சிறந்த விளம்பரம் என்றும், ஜனநாயகத்தால் எதையும் வழங்க முடியும் என்பதை இதுவே கூறுகிறது என்றும் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.