தமிழ்நாட்டில் அதிமுகவுடன் தான் கூட்டணி; உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி.!
தமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி தொடரும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
பாஜக நிர்வாகிகள் விலகல் மற்றும் பாஜகனுடனான அதிமுக கூட்டணி தொடருமா என்று சலசலப்புகள் நிலவிவந்த நிலையில், டெல்லியில் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அமித்ஷா தமிழ்நாட்டில் அதிமுகவுடனான, பாஜக கூட்டணி தொடரும் என தெரிவித்துள்ளார்.
அதிமுக-பாஜக கூட்டணி தொடர்பாக கடந்த சில வாரங்களாக, இரு கட்சியினரிடையே கருத்து வேற்றுமை நிலவி வந்தது. மேலும் பாஜகவின் நிர்வாகிகள் சிலபேர் அதிமுகவில் இணைந்தனர், இதனால் தமிழ்நாடு பாஜக தலைவரான அண்ணாமலையும், பாஜக-அதிமுக கூட்டணி அமைந்தால் தனது பதவியை ராஜினாமா செய்வதாகவும் கூறியிருந்தார்.
மேலும் தேசிய தலைமையுடன் இது குறித்து பேச உள்ளதாகவும் தெரிவித்த அண்ணாமலை, கூட்டணிக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை, தலைமை தான் கூட்டணி குறித்து முடிவு செய்யும் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் 2024 நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி விவகாரத்தில், பாஜக-அதிமுக கூட்டணி தமிழ்நாட்டில் தொடரும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.