நேபாளத்தில் பசுவை கொன்றவருக்கு 12 ஆண்டுகள் ஜெயில் தண்டனை..!
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இந்துக்கள் அதிகம் உள்ளனர். இங்கு பசு தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பசுவதை தடுப்பு சட்டம் இங்கு அமலில் உள்ளது.
இந்தநிலையில் யாம் பகதூர் காத்ரி என்பவர் தான் வளர்த்த 3 பசுக்களை கொன்றுவிட்டார். இதை பார்த்த அவரது பக்கத்து வீட்டுக்காரர். பல்தேவ் பட் போலீசில் புகார் செய்தார்.
எனவே பசுவதை தடுப்பு சட்டத்தின் கீழ் காத்ரி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவர்மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை நீதிபதி ராம்சந்திர பதேல் முன்னிலையில் நடந்தது. முடிவில் பசுக்களை கொன்ற காத்ரிக்கு 12 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.