பென் ஸ்டோக்ஸ்-க்கு என்னாச்சி? சி.எஸ்.கே. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த மைக் ஹஸ்ஸி!

Default Image

ஐபிஎஸ் போட்டி தொடங்க இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில், சிஎஸ்கே ரசிகர்களுக்கு, மைக் ஹஸ்ஸி அதிர்ச்சி தகவல்.

ஐபிஎல் 16-ஆவது சீசனின் முதல் போட்டி வரும் 31-ஆம் தேதி தொடங்குகிறது. நடப்பு சாம்பியனான ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது. ஐபிஎல் தொடக்க விழா வரும் 31ம் தேதி சீசனின் முதல் போட்டிக்கு முன் குஜராத் அகமதாபாத்தில் அமைந்துள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

வீரர்கள் தீவிர பயிற்சி:

ஐபிஎல் போட்டி இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில், இதற்கான எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்துவிட்டது. ஐபிஎஸ் தொடரில் பங்கேற்கும் 10 அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்ளும் சென்னை அணி, சொந்த மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஷாக்:

சென்னை அணியின் முக்கிய வீரர்களான தோனி, ஜடேஜா, ருத்ராஜ், பென் ஸ்டோக்ஸ், ராயுடு மற்றும் இளம் வீரர்கள் உள்ளிட்ட அனைவரும் சேப்பாக்கம் மைதானத்தில் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த சமயத்தில், போட்டி தொடங்க ஒரு சில நாட்களே உள்ள நிலையில், சிஎஸ்கே ரசிகர்களுக்கு, பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

பென் ஸ்டோக்ஸ்-க்கு காயம்:

அதாவது, சிஎஸ்கே ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ்-க்கு இடது கால் முட்டியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக, ஐபிஎல் 2023 சீசனின் முன்பகுதியில், ஸ்டோக்ஸ் பவுலிங் செய்யமாட்டார் என்றும் பேட்ஸ்மேனாக மட்டுமே அவரை  பயன்படுத்த போவதாகவும் சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி கூறியுள்ளார். கடந்த டிசம்பரில் நடந்த ஐபிஎல் மினி ஏலத்தில் அதிகபட்ச விலையாக பென் ஸ்டோக்ஸ்-ஐ ரூ.16.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

தீவிர கண்காணிப்பு:

மைக் ஹஸ்ஸியின் இந்த அதிர்ச்சி தகவல் சிஎஸ்கே ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பென் ஸ்டோக்ஸ் காயம் குறித்து சென்னை மற்றும் இசிபியைச் சேர்ந்த பிசியோக்கள் மிகவும் நெருக்கமாக இணைந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் என்று பைக் ஹஸ்ஸி கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்