நாளை மக்கள் ஆதரவுடன் உங்களை ஆட்சியில் இருந்து நீக்குவோம் – ஜோதிமணி எம்.பி
நாளை மக்கள் ஆதரவுடன் உங்களை ஆட்சியில் இருந்து நீக்குவோம் என ஜோதிமணி எம்.பி ட்வீட்.
பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறு விளைவிக்கும் விதமாக பேசியதாக ராகுல்காந்தி மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில், இவருக்கு 2 ஆண்டுகள் வழங்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, ராகுல்காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செயல்பட்டதால், அவர் வசிக்கும் அரசு பங்களாவை காலி செய்ய மக்களவை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு ராகுல் காந்தியும் பதிலுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி ட்வீட்
இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பாராளுமன்றம் மற்றும் அவரது இல்லத்தில் இருந்து, இன்று, எனது தலைவரை நீக்க உங்கள் அதிகாரத்தை நீங்கள் தவறாகப் பயன்படுத்தலாம். நாளை மக்கள் ஆதரவுடன் உங்களை ஆட்சியில் இருந்து நீக்குவோம்.’ என பதிவிட்டுள்ளார்.
@narendramodi today,you can abuse your power to remove my leader @RahulGandhi from the parliament and his residence. Tomorrow,with the support of the people,we will remove you from the Government.#RahulGandhi pic.twitter.com/frFnU1Jxrm
— Jothimani (@jothims) March 28, 2023