3 மாதமாக சொல்ல முடியாத வேதனை…கண்கலங்கிய நடிகை சமந்தா.!
நடிகை சமந்தா கடந்த ஆண்டு அக்டோபரில், தசைகள் பலவீனமடையக்கூடிய ஆட்டோ இம்யூன் நிலையான மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். பிறகு அந்த நோயில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக குணமடைந்து தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி ஆரம்ப காலகட்டத்தை போல படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார்.
இதற்கிடையில், சமந்தா தற்போது நடித்துள்ள ‘சகுந்தலம்’ படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. நடிகை தனது திரைப்பட விளம்பரங்களின் ஒரு பகுதியாக, பல ஊடக இணையதளங்களுடன் உரையாடி வருகிறார், அந்த வகையில் மயோசிடிஸ் நோயால் தான் சந்தித்த சவால்கள் குறித்து நேர்காணலில் நடிகை சமந்தா மனம் திறந்துள்ளார்.
இது குறித்து பேசிய சமந்தா “பாதிப்பு ஏற்பட்ட முதல் 3 மாதங்களுக்கு சொல்லமுடியாத அளவுக்கு வேதனையாக இருந்தது. மிகவும் வேதனையும் கண்ணீருமாக இருந்தது. சென்ற இடமெல்லாம் இருளாகவே இருந்தது. அதற்கு பிறகு எனது மொத்த வாழ்க்கையே உடல் மற்றும் மனரீதியாக மாறியுள்ளது.
தனக்கு தேவையான அனைத்து ஆதரவையும் வழங்கியதால், தன்னுடன் பணிபுரிந்த இயக்குனர் மற்றும் நடிகர்களுக்கு நடிகை நன்றி” என கூறியுள்ளார். மேலும் சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள ‘சகுந்தலம்’ வரும் ஏப்ரல் 14 -ஆம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.