உமேஷ் பால் கடத்தல் வழக்கு..! அதிக் அகமதுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு..!

Default Image

உமேஷ் பால் கடத்தல் வழக்கில் அதிக் அகமதுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு.

உமேஷ் பால் கடத்தல் வழக்கில் மாஃபியாவாக மாறிய அரசியல்வாதியான அதிக் அகமதுவுக்கு, பிரயாக்ராஜ் எம்பி-எம்எல்ஏ நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

எம்எல்ஏ ராஜு பால் கொலை :

2005 ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ ராஜு பால் கொலை வழக்கில் அதிக் அகமது குற்றம்சாட்டப்பட்டார். ராஜு பால் கொலை வழக்கின் முக்கிய சாட்சியான உமேஷ் பால் பிப்ரவரி 28, 2006 அன்று கடத்தப்பட்டார். இதையடுத்து உமேஷ் பால், இந்த ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி பிரயாக்ராஜில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த இரண்டு வழக்கிலும் முக்கிய குற்றவாளியாக அதிக் அகமது குற்றம்சாட்டப்பட்டார்.

நீதிமன்றத்தில் ஆஜர் :

உமேஷ் பால் கடத்தல் வழக்கில் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் எம்பி-எம்எல்ஏ நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மாஃபியா டான் அதிக் அகமது பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கில், ஆதிக் அகமதுவின் சகோதரர் அஷ்ரப் உட்பட மற்ற குற்றவாளிகளும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

உமேஷ் பால் கடத்தல் வழக்கில் தீர்ப்பு:

பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டு நிலையில் உமேஷ் பால் கடத்தல் வழக்கில் பிரயாக்ராஜ் எம்பி-எம்எல்ஏ நீதிமன்றம் மாஃபியாவாக மாறிய அரசியல்வாதியான அதிக் அகமதுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும் அவருக்கு ரூ.5,000 அபராதம் விதித்தது. இந்த வழக்கில் அதிக் அகமது, தினேஷ் பாசி, கான் சவுலத் ஹனிப் ஆகியோருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்தது. ஆதிக் அகமதுவின் சகோதரர் அஷ்ரப் உட்பட மற்ற ஏழு குற்றவாளிகளும் விடுவிக்கப்பட்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்