“மன்கட்”… செம கடுப்பில், பேட்டை எறிந்த வீரர்; ஷாக்கான பவுலர்.! வைரலாகும் வீடியோ…
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் சதர்ன் கிரிக்கெட் சங்கத்தின் முதல் தர இறுதிப் போட்டியில், கிளேர்மாண்ட் மற்றும் நியூ நோர்ஃபோக் இடையேயான SCA கிராண்ட் பைனலின், இரண்டாவதாக பேட் செய்யும் போது, ஜாரோட் கேய் ‘மன்கட்’ முறைப்படி ரன் அவுட் ஆனார். பந்துவீச்சாளர் ஹாரி பூத், நன்றாக விளையாடிக்கொண்டிருந்த ஜாரோட் கேய்-ஐ, நான்-ஸ்ட்ரைக்கர் திசையில் ரன் அவுட் செய்தார்.
இதனால், கோபத்தில் ஜாரோட் கேய் தனது பேட் மற்றும் ஹெல்மெட்டை வீசியதோடு, கையுறைகளையும் தனது காலால் உதைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
முதலில் பேட் செய்த நியூ நார்போக் அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் எடுத்தது. துணை கேப்டன் ஹாரி பூத் (63) மற்றும் ஜேசன் ரிக்பி (67) அரைசதம் அடித்தனர். ஆனால் தாமஸ் பிரிஸ்கோவின் ஆட்டமிழக்காமல் 22 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தது நியூ நார்போக்கின் இன்னிங்ஸுக்கு வலு சேர்த்தது.
இதனை தொடர்ந்து, ஆடிய கிளேர்மான்ட் அணி 214 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஒரு கட்டத்தில் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்த போது, ஜாரோட் கேய் ரன் அவுட் ஆட்டத்தை மாற்றியது. இதனால், நியூ நார்போக் 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
A Tasmanian cricketer was NOT happy after getting out via a Mankad and launched his bat, helmet and gloves into the air! ???????? pic.twitter.com/y64z4kwpE3
— Fox Cricket (@FoxCricket) March 28, 2023