20 ஆண்டுகளில் வராத மாற்றங்களை 2 ஆண்டுகளில் கொண்டு வந்துள்ளோம் – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
20 ஆண்டுகளில் வராத மாற்றங்களை 2 ஆண்டுகளில் கொண்டு வந்துள்ளோம் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு.
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் சட்டப்பேரவையில் உரையாற்றினார். வார், திமுக அளித்த 3537 வாக்குறுதிகளில், இதுவரை 3,038 வாக்குறுதிகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
காலை உணவு வழங்குவோம் என அதிமுக வாக்குறுதியில் கூறியும் செய்ய முடியாததை நாங்கள் செய்துகாட்டியுள்ளோம். 20 ஆண்டுகளில் வராத மாற்றங்களை 2 ஆண்டுகளில் கொண்டு வந்துள்ளோம்.
அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுரை மற்றும் ஊக்கமே முழு காரணம். அடுத்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் மதுரையில் நடைபெறவுள்ளதாகவும், ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் கூடுதல் சீர்திருத்தங்களை முன்வைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.