அரசு பங்களாவை காலி செய்யும் ராகுல்காந்தி.! வெளியான உருக்கமான கடிதம்.!
எம்பி பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்ப்பட்ட ராகுல்காந்திக்கு அரசு பங்களாவை காலி செய்ய உத்தரவு வெளியானது. இதனை, தொடர்ந்து, அரசு பங்களாவை காலி செய்யும் ராகுல்காந்தி கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறு விளைவிக்கும் விதமாக பேசியதாக ராகுல்காந்தி மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனை அடுத்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது குஜராத், சூரத் நீதிமன்றம். இதனால் ராகுல்காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
ராகுல்காந்திக்கு நோட்டீஸ் :
தகுதிநீக்க நடவடிக்கையை தொடர்ந்து ராகுல்காந்தி டெல்லியில் வசிக்கும் அரசு பங்களாவை காலி செய்ய உத்தரவு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இந்த நோட்டீசுக்கு பதில் அளிக்கும் விதமாக ராகுல்காந்தி பதில் கடிதம் எழுதியுள்ளார்.
நினவுகளுக்குக் நன்றி :
அதில், கடந்த 4 முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த அரசு பங்களாவில் தொடர்ந்து வசித்து வந்துள்ளேன். கடந்த காலங்களில் எனக்கு நிறைய நல்ல நினைவுகளை இந்த வீடு அளித்துள்ளது அதற்கு நன்றி எனவும், அரசு உத்தரவுக்கு நான் கட்டுப்படுவேன் என அதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.