பரிதாபம்… பேருந்தில் தீ விபத்து.. 20 பேர் பலி.! பதைபதைக்க வைக்கும் வீடியோ.!
சவூதி அரேபியாவில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
சவூதி அரேபியாவின் ஆசிர் என்ற இடத்தில் இன்று காலை புனித நகரமான மெக்காவுக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று அங்கிருந்த பாலத்தின் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. பிரேக் செயலிழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
பேருந்து மலைகள் வழியாக பாலத்தில் இறங்கிக் கொண்டிருந்தபோது, பிரேக் பழுதாகி, பாலத்தின் முடிவில் உள்ள தடுப்புச் சுவரில் மோதி, கவிழ்ந்து, தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. இந்த பயங்கரமாக விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 29 பேர் காயமடைந்துள்ளனர்.
விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணையப்பு துறையினர் காயமடைந்த பயணிகள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பேருந்து தீப்பற்றி கருகி புகையாக வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
सऊदी अरब में ब्रेक फेल होने से कार में टक्कर के बाद बस में लगी आग!
उमराह पर गए 20 श्रद्धालुओं ने गंवाई जान!#BusAccident #SaudiArabia pic.twitter.com/qDef9tOaXq
— News Core India (@NewsCoreIndia) March 28, 2023