ஐபிஎல்-லில் களமிறங்கிய அதிரடி ஆட்டக்காரர் ஸ்டீவ் ஸ்மித்..! இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
ஐபிஎல் 2023 தொடரில் இணைய உள்ளதாக ஸ்டீவ் ஸ்மித் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
2023- ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 31-ஆம் தேதி தொடங்கப்படவுள்ள நிலையில் ஐபிஎல்-ல் மீண்டும் இணைய உள்ளதாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடினார்.
இந்த தொடரில், டெல்லி கேபிடல்ஸில் 8 போட்டிகளில் 152 ரன்கள் எடுத்தார். இருப்பினும், 2022 மற்றும் 2023 க்கான ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் எந்த அணியும் அவரை எடுக்க முன்வரவில்லை. இந்நிலையில் ஸ்டீவ் ஸ்மித் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
அதில் “நமஸ்தே இந்தியா. உங்களுக்காக சில உற்சாகமான செய்திகள் என்னிடம் உள்ளன. நான் ஐபிஎல் 2023 இல் இணைகிறேன். நான் கிரிக்கெட்டை மிகவும் நேசிக்கும் இந்தியாவின் முக்கிய ஐபிஎல் தொடரில் இணைவதில் மகிழ்ச்சியடைகிறேன் ” என்று ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார்.
அவர் ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளாரா என்பது தெரியவில்லை ஆனால் வர்ணனையாளராக இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
— Steve Smith (@stevesmith49) March 27, 2023