பொதுச்செயலாளராக முதல் அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்.. ஏப்ரல் 5 முதல் உறுப்பினர் சேர்க்கை படிவம்!

Default Image

அதிமுக பொதுச்செயலாளராக தேர்வானதும் உறுப்பினர் சேர்க்கைக்கான முதல் அறிவிப்பை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளராக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர். பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதால் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பொதுச்செயலாளர் தேர்வு:

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்திய பொள்ளாச்சி ஜெயராமன், நத்தம் விஸ்வநாதன் அறிவித்தனர். அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வெற்றி சான்றிதழ் இபிஎஸ்-யிடம் வழங்கினர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உறுப்பினர் படிவம்:

இந்த நிலையில், அதிமுகவில் உறுப்பினர்களை சேர்க்கும் படிவத்தை ஏப்ரல் 5-ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளராக தேர்வானதும் உறுப்பினர் சேர்க்கைக்கான முதல் அறிவிப்பை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

புதிய உறுப்பினர் சேர்ப்பு:

ஏப்ரல் 5-ஆம் தேதி முதல் அதிமுக தலைமை அலுவலகத்தில் உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பம் படிவம் விநியோகிக்கப்படும். புதிய உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பம் படிவங்களை பெற்று பூர்த்தி செய்து ரூ.10 வீதம்  செலுத்த வேண்டும் என்றும் ஏற்கனவே உள்ள அதிமுக உறுப்பினர்களும் தங்களது பதிவை ஏப்ரல் 5 முதல் புதுப்பித்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்