உயர்நீதிமன்ற தீர்ப்பு சாதகம்; அதிமுக பொதுச்செயலாளர் ஆகிறார் எடப்பாடி பழனிசாமி.!
ஓபிஎஸ் தரப்பு மனுக்கள் தள்ளுபடி ஆனதை அடுத்து எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆகிறார்.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், பொதுக்குழு தீர்மானங்களை எதிராக ஓபிஎஸ் தரப்பில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கிற்கான அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பின்பு, இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த ஆண்டு ஜூலை 11-ல் நடந்த அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் உள்ளிட்டோர் வழக்கு தொடுத்திருந்தனர். மேலும் அதிமுகவின் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கு எதிராகவும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
அதன்படி இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ்பாபு, அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் எனவும், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை வெளியிடவும் தடையில்லை எனவும் கூறி ஓபிஎஸ் மற்றும் அவரது தரப்பில் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பு சாதகமாக வந்ததையடுத்து, எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் பொதுச்செயலாளராக பதவியேற்க உள்ளார். எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவிற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி இந்த பொதுச்செயலாளர் பதவியை ஏற்கவுள்ளார்.