என்னிடம் சூப்பர் ஸ்டார் சாயல்…நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி.!
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆகஸ்ட் 16, 1947’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்தார்.
விழா முடிந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சிவகார்த்திகேயன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து பேசியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் ” நான் பல ஆண்டுகளாக ரஜினி சாருடைய தீவிர ரசிகன். எனவே படத்தில் அடிக்கடி வரும் காட்சிகளில் என்னை அறியாமல் அவருடைய சாயல் எனக்கு வருகிறது.
வேணும் என்று நான் ரஜினி சார் சாயலில் நடிக்கணும் என்று நடிக்கமாட்டேன். சூப்பர் ஸ்டார் ரஜினி போல மிமிக்ரி செய்துள்ளேன். கிட்டத்தட்ட நான் சின்னத்திரையில் இருக்கும் போது 2,000க்கும் மேற்பட்ட மேடைகளில் அவருடைய குரலை மிமிக்ரி செய்துள்ளேன்.
அதனை பார்த்த பலரும் அவருடைய குரல் எனக்கு நன்றாக வருகிறது என்றே கூறினார்கள். எனவே, சூப்பர் ஸ்டார் சாயல் என்னிடம் இருப்பது சந்தோஷம்தான்” என மிகவும் நெகிழ்ச்சியுடன் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியுள்ளார்.