தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் ஸ்ட்ரைக்.! ஓய்வூதியம், அகவிலைப்படி, காலிப்பணியிடங்கள் கோரிக்கை.!
ஓய்வூதியம், அகவிலைப்படி, காலிப்பணியிடங்கள் என பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் இன்று ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
தமிழநாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட உள்ளனர். இதனால், இன்று ஒருநாள் தமிழகத்தில் அரசு பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வோம் என முதல்வர் கூறியும் இன்னும் நடக்கவில்லை என்றும், அதனால் புதிய பென்ஷன் திட்டத்தை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரியும், மாநிலத்தில் அரசு காலி பணியிடங்கள் லட்ச கணக்கில் இன்னும் நிரப்பப்படாமல் இருக்கிறது. அதனை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும், நிலுவையில் உள்ள அகவிலைப்படியை உடனடியாக தரவேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இவ்வாறு பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் இன்று ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.