இனி பிளாஸ்டிக் பைகளுக்குப் பதில் மஞ்சப்பை தான்…மேயர் பிரியா அறிவிப்பு.!

Default Image

பெருநகர சென்னை மாநகராட்சியின் 2023-24ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை இன்று மேயர் பிரியா ராஜன் தலைமையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்தாய் வாழ்த்துடன் தொடங்கிய கூட்டத்தில், மேயர் பிரியா தனது பட்ஜெட் அறிவிப்பை வெளியிட்டார்.

அதில் ” பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கும் முயற்சியாக, வீடுகளில் பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக மஞ்சப்பை விநியோகத்தைத் தொடங்கும் குடிமை அமைப்பு அமைக்கப்படும். ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி மீதான தடை அமலாக்கத்தை தீவிரப்படுத்தும் வகையில், பெருநகர சென்னை மாநகராட்சி சோதனை அடிப்படையில் “மஞ்சப்பை” வழங்கும் திட்டம், சுயஉதவி குழுக்களுடன் இணைந்து செயல்படுத்தப்படும்.  இந்த திட்டம் பொது மக்களின் வரவேற்பு மற்றும் கருத்துகளின் அடிப்படையில் இத்திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும்.

அதில் பெருநகர சென்னை மாநகராட்சியில் நாள்தோறும் சேகரிக்கப்படும் சுமார் 20 மெட்ரிக் டன் நெகிழிக் கழிவுகளிலிருந்து எரிபொருளாக பயன்படுத்தக்கூடிய எண்ணெய் தயாரிக்கும் ஆலை (Pyrolysis Plant) மணலியில் கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும், மறுசுழற்சி செய்ய இயலாத உலர் கழிவுகளை, விஞ்ஞான ரீதியில் எரிக்க 5 மெட்ரிக் டன் திறன் கொண்ட எரியூட்டி (Incinerator) ஆலை ஏற்கனவே திருவொற்றியூரில் கட்டமைக்கப்பட்டுள்ளது. மேற்கண்டுள்ள இரண்டு பணிகளுக்கான ஆலையினை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற்ற பின்னர், செயலாக்கத்திற்கு கொண்டு வரப்படும்” என மேயர் பிரியா அறிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்