ஆணா.? பெண்ணா.? கருக்கலைப்புக்கு 30 ஆயிரம் ரூபாய்.! அதிர வைக்கும் பின்னணி தகவல்கள்.!
தருமபுரியில் ஒரு கும்பல் சட்ட விரோதமாக கருவில் உள்ள சிசு ஆணா பெண்ணா என கண்டறிந்து கருக்கலைப்பு செய்து வந்துள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் ஆண் பெண் விகித சராசரி என்பது குறைவாக இருந்து வந்துள்ளது. இதற்கான காரணத்தை கண்டறிய தருமபுரி மருத்துவத்துறை இயக்குனர் சாந்தி, இதற்கான காரணங்களை ஆராய நடவடிக்கைகளை மேற்கொண்டது.
சட்டவிரோத கருக்கலைப்பு :
அப்போது, தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் பகுதியில் ரங்கம்மாள் என்பவரது வீட்டில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு சம்பவங்கள் நடப்பதாக வெளியான தகவலின் படி, மருத்துவதுறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
கருவில் ஆணா.? பெண்ணா.? :
அந்த சோதனையில் வீட்டில் ஸ்கேன் செய்யும் இயந்திரம் வைத்து அதன் மூலம் சட்டவிரோதமாக கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என கண்டறிந்து அதன் பின்னர் கருக்கலைப்பும் செய்து வந்தது தெரிய வந்துள்ளது.
கைது :
இதில் ஒரு கரு தலைப்புக்கு 30 ஆயிரம் ரூபாய் வரையில் கட்டணமாக வசூல் செய்ததும் தெரியவந்துள்ளது. அந்த வீட்டில் இருந்து 7 லட்சம் மதிப்புள்ள ஸ்கேன் இயந்திரத்தையும் , 38 ஆயிரம் ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், அங்கு வேலை பார்த்த அனைவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.