சோகம்..கடலூரில் பள்ளி வேன் மோதி 3 வயது குழந்தை பலி..!

Default Image

கடலூர் அருகே பள்ளி வேன் மோதி 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடலூர் அருகே மேற்கு ராமபுரம் கிராமத்தில் பள்ளி வேன் மோதி 3 வயது குழந்தை உயிரிழந்துள்ளது. ராமபுரம் கிராமத்தில் தேஜேஸ்வரன் என்ற 3 வயது குழந்தை சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்பொழுது சாலையில் வந்து கொண்டிருந்த பள்ளி வேன் குழந்தை வருவதை கவனிக்காமல் சாலையை கடக்க முயன்ற தேஜேஸ்வரன் மீது மோதியுள்ளது.

இந்த மோதலில் தேஜேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவ குறித்து தகவல் அறிந்து விபத்து ஏற்பட்ட இடத்திற்கு வந்த காவல் துறையினர் குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

இந்த விபத்திற்கு காரணமான வேன் ஓட்டுநர் விபத்து நடந்த இடத்திலிருந்து தப்பிய நிலையில், விபத்திற்கு காரணமாண தனியார் பள்ளி வேன் திருப்பாதிரிப்புலியூர் காவல்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலும் வேன் ஓட்டுநரை தேடும் பணியும், விபத்து குறித்த விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்