பொதுமக்கள் கவனத்திற்கு..! தமிழகத்தில் 11 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை..! பட்டியல் இதோ…

Default Image

தமிழகத்தில் ஏப்ரல் மாதத்தில் எந்தெந்த நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை என்ற விவரம் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் ஒரு புதிய நிதியாண்டின் ஆரம்பமான ஏப்ரல் மாதம் மிகவும் முக்கியமானது. 2023-24 நிதியாண்டின் தொடக்கத்தைக் குறிக்கும் ஏப்ரல் மாதம் ஏராளமான வங்கி விடுமுறைகளால் நிரம்பியுள்ளது. இதனால் பொதுமக்கள் ஏப்ரல் மாதத்தில் வங்கி விடுமுறைப் பட்டியலைச் சரிபார்த்துவிட்டு வங்கிப்பணிகளுக்கு திட்டமிடுவது அவசியம்.

வங்கிகள் மூடப்படுவதால் வாடிக்கையாளர்களுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்க, இந்திய ரிசர்வ் வங்கி ஒவ்வொரு மாதமும் வங்கி விடுமுறைப் பட்டியலை வெளியிடுகிறது. ஏப்ரல் மாதத்தில் பல பண்டிகைகள், பிறந்தநாள் மற்றும் வார இறுதி நாட்கள் உட்பட மொத்தம் 11 வங்கி விடுமுறைகள் உள்ளன.

ஏப்ரல் 2023 வங்கி விடுமுறை பட்டியல் பின்வருமாறு:

  • ஏப்ரல் (2,9,16,23,30) 2023 – ஆகிய 5 தினங்களும், நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.
  • ஏப்ரல் 1, 2023 (சனி) – முழு நிதியாண்டுக்கான கணக்கு முடிக்கும் நாள்,
  • ஏப்ரல் 4, 2023 (செவ்வாய்) – மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு பல்வேறு நகரங்களில் வங்கிகள் மூடப்படும்.
  • ஏப்ரல் 7, 2023 (வெள்ளி) – புனித வெள்ளியை முன்னிட்டு நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும்.
  • ஏப்ரல் 8, 2023  (சனி) – மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை, நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும்.
  • ஏப்ரல் 14, 2023 (வெள்ளி) – டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்தநாள் மற்றும் தமிழ்புத்தாண்டு காரணமாக நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும்.
  • ஏப்ரல் 22, 2023 (சனி) – ஈத் மற்றும் நான்காவது சனிக்கிழமை காரணமாக பல இடங்களில் வங்கிகள் மூடப்படும்.

இந்த வங்கி விடுமுறை நாட்களில் பெரும்பாலான வங்கிகள் மூடப்படும் என்றாலும், ஆன்லைன் வசதிகள் மற்றும் ஏடிஎம்கள் செயல்படும், மேலும் UPI மூலம் பணம் செலுத்தலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்