கும்பக்கரை அருவியில் திடீரென்று ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம்.! சிக்கிய சுற்றுலாப் பயணிகள்.!
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழையால் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்து ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அங்கு இன்று வெள்ளமும் ஏற்பட்டுள்ளது.
வார விடுமுறை இன்று என்பதால் அருவியில் குளிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். அங்கு வருகை தந்த பலரும் கும்பக்கரை அருவியில் மிகவும் சந்தோசமாக குளித்து கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
இந்த வெள்ளத்தில் கிட்டத்தட்ட 30 பேர் வரை சிக்கித் தவித்துக் கொண்டிருந்தனர். உடனடியாக களத்தில் இறங்கிய வனத்துறையினர் அவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்து வெள்ளம் இல்லாத பகுதிக்கு அழைத்து வந்தனர். மேலும் திடீரென வெள்ளம் ஏற்பட்டதால் அங்கிருந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.