தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு:இன்று நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை !
இன்று தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள ஒரு நபர் விசாரணைக் கமிஷன் மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனை நடத்தி விசாரணை தொடங்கவுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தது குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசனை தமிழக அரசு நியமித்து அரசாணை பிறப்பித்தது.
இந்நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசித்து ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இடம் ஒதுக்கப்பட்டு விசாரணைக் கமிஷனுக்கான அலுவலகம் அமைக்கப்படுகிறது.
அதற்கான ஊழியர்களும் நியமிக்கப்பட்ட பின், செவ்வாய் கிழமையன்று சம்பவம் நடைபெற்ற இடங்களை பார்வையிடவுள்ளதாகவும், அதன் பின் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து விசாரணையைத் தொடங்கவுள்ளதாகவும் அருணா ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.
மேலும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்தும், போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்கள் ஏதும் நடந்ததா என்பது குறித்தும் விசாரணை ஆணையத்தில் ஜூன் 22 க்குள் பொதுமக்கள் நேரிலோ, தபாலிலோ விசாரணை ஆணையத்தில் தகவல் தெரிவிக்கலாம் என்று ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.