166 கோடியில் கூடுதல் நீதிமன்றங்கள்.! அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு,க.ஸ்டாலின்.!

Default Image

மதுரை மாவட்டத்திற்கு கூடுதல் நீதிமன்ற வளாகத்தை அமைக்க இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அடிக்கல் நட்டும் விழா நடைபெற்றது. 

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் கூடுதல் நீதிமன்ற வளாகங்களை திறக்க இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கான விழாவானது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, சென்னை உயர்நீதிமன்ற நீதிபத்தி டி.ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு கூடுதல் வளாகம் அமைக்கவும், மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்றத்திற்கு கூடுதல் வளாகம் அமைக்கவும் 166 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான அடிக்கல் விழா காணொளி வாயிலாக நடைபெற்றது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்