பங்கி ஜம்பிங்கில் கயிறு அறுந்து நூலிழையில் உயிர் தப்பிய சுற்றுலா பயணி; வீடியோ வைரல்.!
பங்கி ஜம்பிங்கில் கயிறு அறுந்து விழுந்ததில் ஹாங்காங்கைச் சேர்ந்த அமான், ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய வீடியோ இணையத்தில் வைரல்.
தாய்லாந்தின் பட்டாயாவில் விடுமுறையில் இருந்தபோது, கேளிக்கை பூங்காவில் நண்பருடன் பங்கி ஜம்பிங் செய்ய முடிவு செய்த மைக், தான் 10-அடுக்கு ஜம்பிங்கில் நூலிழையில் உயிர் தப்பிய கதையை விவரித்து கூறியுள்ளார்.
ஹாங்காங்கைசேர்ந்த 39 வயதான அந்த சுற்றுலாப்பயணியின் பங்கி ஜம்பிங் வீடியோவும் இணையத்தில் வெளிவந்தது. மைக் டைவ் அடிக்கும் போது அடிப்பகுதியை அடைந்து கீழே குதிக்கும் நேரம் கயிறு முழுவதுமாக அறுந்து அவர் தண்ணீரில் விழுந்தார்.
தண்ணீரில் விழுந்த மைக், காயங்களுடன் உயிர்தப்பினார். மேலும் குதிக்கும்போது அது மிகவும் உயரமாக இருந்ததால் நான் கண்களை மூடியதாகவும், கண்களைத் திறந்தபோது கயிறு அறுந்துவிட்டதையும் தான் தண்ணீரில் விழுந்துள்ளதையும் உணர்ந்ததாக மைக் மேலும் கூறினார்.
காயங்கள் மிகவும் தீவிரமாக இருந்ததாக தெரிவித்த மைக், தனது டைவிங் செலவையும் மருத்துவத்திற்காக எக்ஸ்ரே செலவும் கேளிக்கை பூங்கா ஏற்றுக் கொண்டதாக மைக் தெரிவித்தார்.
WATCH: A tourist from Hong Kong plummeted into a lake during a 10-storey high bungee jump in Pattaya, Thailand when his cord snapped midair, sending him plunging hard into the water below. He survived the fall and suffered from severe bruising. pic.twitter.com/htHyFs4O42
— TODAY (@TODAYonline) March 22, 2023