பாடகி பாம்பே ஜெயஸ்ரீ உடல்நிலை எப்படி இருக்கு.? உறவினர்கள் கொடுத்த தகவல்.!

Default Image

பிரபல கர்நாடக பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீ நேற்று இங்கிலாந்து சென்றிருந்த போது திடீரென மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு  லிவர்பூலில் உள்ள ஒரு ஹோட்டலில் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனையடுத்து, அவர் அங்கிருந்த  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மருத்துவமனையில் ‘கீ ஹோல்’ அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது, அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, விரைவில் பூரண குணமடைந்தவுடன் சென்னைக்கு அழைத்து வரப்படுவார் எனவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.

இந்நிலையில், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், பிரபல பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீ உடல்நிலை சீராக உள்ளதாக உறவினர்கள் தகவல் கொடுத்துள்ளனர்.  சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சைகளை பெற்றதால் அவர் தற்போது நலமுடன் உள்ளதாகவும் கூறியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்