புதுச்சேரி: மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.6500 ஆக உயர்வு.! துணை நிலை ஆளுநர் ஒப்புதல்

Default Image

புதுச்சேரியில் மீனவர்களுக்கான மீன்பிடி தடைகால நிவாரணம் ரூ.6500 ஆக உயர்த்தி வழங்க  துணை நிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

புதுச்சேரி, மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மீனவர்களுக்கான விடுமுறை கால நிதிஉதவி மற்றும் இயற்கை பேரிடர் கால நிவாரண உதவித் திட்டத்தின்கீழ், புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கு மீன்பிடித் தடைக்கால நிவாரணம் மற்றும் விடுமுறைக் கால நிதிஉதவியை உயர்த்தி வழங்குவதற்கான கோப்பிற்கு மாண்புமிகு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.

முன்னதாக, மீன்பிடித் தடைக்கால நிவாரணம் ரூ.5,500-ல் இருந்த நிலையில், தற்போது ரூ.6,500 ஆகவும் அது போல், விடுமுறைக்கால நிதியுதவி ரூ.2,500-ல் இருந்த நிலையில், இப்பொது ரூ3,000 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்