கையில் பாட்டில்… நடிகருடன் செம குத்தாட்டம்…ப்ரோமோஷனில் கீர்த்தி சுரேஷ் செய்த அட்ராசிட்டிஸ்.!
நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது நானிக்கு ஜோடியாக தசரா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் மார்ச் 30-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் ட்ரைலர் கூட சமீபத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சன பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது.
இந்நிலையில், படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், படத்தின் ப்ரோமோஷனுக்காக சமீபத்தில் படக்குழுவினருடன் கீர்த்தி சுரேஷ் மும்பை சென்று இருந்தார்.
பட டிரைலரில் நானி சரக்கு பாட்டிலை ஒரே கல்பாக அடிக்கும் காட்சி இடம்பெற்றிருக்கும். அதைப்போலவே, இன்று மும்பையில் நடந்த புரமோஷனில் கீர்த்தி சுரேஷ், நானிக்கு போட்டியாக அவரது ஸ்டைலிலேயே பாட்டிலுடன் ஒரே கல்பாக ஜூஸ் குடித்தார். குடித்துவிட்டு நானியுடன் செமயாக நடனம் ஆடியுள்ளார்.
#KeerthiSuresh Massss ???????? #DasaraOnMarch30th pic.twitter.com/OsWlJiS6A5
— Rorschach (@27stories_) March 22, 2023
அதற்கான வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பல நெட்டிசன்கள் கீர்த்தி கையில் வைத்திருப்பது மதுபாட்டில் என கூறிவருகிறார்கள். ஆனால் அது மதுபாட்டில் இல்லை வெறும் பாட்டில் அதற்குள் ஜூஸ் தான் இருந்தது என்பது தெரியவந்துள்ளது.