என் அண்ணன் எப்பொழுதும் பயந்ததில்லை..! பிரியங்கா காந்தி ட்வீட்..!
ராகுல் காந்திக்கு ஜாமின் வழங்கியதையடுத்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ட்வீட் செய்துள்ளார்.
கர்நாடகாவின் கோலாறில் 2019 பொதுத்தேர்தல் பரப்புரையில், “எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது” என ராகுல் காந்தி பேசியிருந்தார். இதனையடுத்து, ராகுல்காந்திக்கு எதிராக குஜராத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் ராகுல் காந்தியை சூரத் நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளதோடு, 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த நிலையில், மேல்முறையீடு செய்ய ஏதுவாக ராகுலுக்கு ஜாமீனும் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, ராகுல்காந்தியின் தங்கை மற்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா, “பயந்த அதிகாரத்தின் ஒட்டுமொத்த சக்தியும் ராகுல் காந்தியின் குரலை நசுக்க முயற்சிக்கிறது. என் சகோதரர் ஒருபோதும் பயந்ததில்லை, பயப்படவும் மாட்டார்” என்று ட்வீட் செய்துள்ளார்.
“உண்மையைப் பேசி வாழ்ந்தார், தொடர்ந்து உண்மையைப் பேசுவார். நாட்டு மக்களின் குரலை தொடர்ந்து எழுப்புவோம் என்றும் உண்மையின் சக்தியும், கோடிக்கணக்கான நாட்டு மக்களின் அன்பும் அவரிடம் உள்ளன” என்று பிரியங்கா காந்தி மேலும்தெரிவித்துள்ளார்.
डरी हुई सत्ता की पूरी मशीनरी साम, दाम, दंड, भेद लगाकर @RahulGandhi जी की आवाज को दबाने की कोशिश कर रही है।
मेरे भाई न कभी डरे हैं, न कभी डरेंगे। सच बोलते हुए जिये हैं, सच बोलते रहेंगे। देश के लोगों की आवाज उठाते रहेंगे।
सच्चाई की ताकत व करोड़ों देशवासियों का प्यार उनके साथ है।
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) March 23, 2023