செம ஸ்டைல்… கொச்சிக்கு பறந்த நடிகர் ரஜினிகாந்த்.! வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ.!
நடிகர் ரஜினிகாந்த் படைப்பிற்காக வெளியே சென்றாலோ அல்லது விருது நிகழ்ச்சியில் பங்கேற்றாலோ அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி மிகவும் ட்ரெண்ட் ஆகிவிடும். அந்த வகையில், தற்போது ரஜினியின் செம மாஸான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
Superstar reached Cochin for #Jailer shoot.
— Christopher Kanagaraj (@Chrissuccess) March 23, 2023
வீடியோவில் ரஜினி டிசர்ட் அணிந்து கொண்டு மிகவும் ஸ்டைலாக இருக்கிறார். வீடியோவை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் என்ன மாஸா இருக்காரு மனுஷன் என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இந்த வீடியோ சென்னை விமான நிலையத்தில் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக சென்னையில் இருந்து ரஜினி கொச்சின் சென்றுள்ளார். அப்போது தான் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
ஜெயிலர் படம் வரும் ஆகஸ்ட் 15- ஆம் தேதி வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் வேலைகள் முன்கூட்டியே முடிந்துவிட்டதால் படத்தை விரைவாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். அதோடு டீசரும் ஏப்ரல் 14ஆம் தேதி அன்று வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.