அதானியைத் தொடர்ந்து, மற்றொரு மிகப்பெரிய ரிப்போர்ட்- ஹிண்டன்பர்க் அளித்த அதிர்ச்சி.!
அதானியைத் தொடர்ந்து மற்றுமொரு பெரிய அறிக்கையை வெளியிடப்போவதாக ஹிண்டன்பர்க் ட்வீட் செய்துள்ளார்.
அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச், சமீபத்தில் இந்தியாவின் மிகப்பெரும் கோடீஸ்வரரான கவுதம் அதானி குறித்து, மிகப்பெரிய அறிக்கை வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதானி குழுமம் பங்குகளைக் கையாளுதல் மற்றும் மோசடி அடிப்படையில் ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை வெளியிட்டிருந்தது.
இதனால் அதானி பங்குகள் மளமளவென சரிந்து மிகப்பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. உலகின் பணக்காரர்கள் பட்டியலிலும் கவுதம் அதானி, டாப் 10 ஐ விட்டு வெளியேறி வரலாறு காணாத சரிவை சந்தித்தார். இதனால் செப்டம்பர் 2022 இல் அதானியின் சொத்து மதிப்பு 150 பில்லியன் டாலரிலிருந்து, சுமார் 53 பில்லியன் டாலராகக் குறைந்தது.
இதற்கு அதானி குழுமங்களின் தரப்பில், ஆதாரமற்ற அறிக்கைகளின், தீங்கு விளைவிக்கும் அறிக்கை என குற்றம் சாட்டியிருந்தது. இதற்கிடையில், அதானி-ஹிண்டன்பர்க் விவகாரத்தில், ஓய்வுபெற்ற நீதிபதி ஏஎம் சப்ரே தலைமையில் ஆறு பேர் கொண்ட நிபுணர் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது.
பங்கு விலையில் முறைகேடுகள் நடந்துள்ளதா என்பதைக் கண்டறிய விசாரணை நடத்துமாறு செபிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் மற்றுமொரு புதிய அறிக்கை…மிகப்பெரிய அறிக்கையை(Report) வெளியிடப்போவதாக ஹிண்டன்பெர்க் ட்வீட் செய்து அதிர்ச்சி அளித்துள்ளார்.<
New report soon—another big one.
— Hindenburg Research (@HindenburgRes) March 22, 2023
/p>