நன்றி கூற மாட்டேன்… நடிகர் கார்த்திக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினின் வித்தியாசமான பாராட்டு பதில்.!
வேளாண் பட்ஜெட் குறித்து முதல்வருக்கு நன்றி தெரிவித்தார் நடிகர் கார்த்தி. அதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் தமிழக அரசு சட்டசபையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தது. அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் மாணவர்கள் விவசாய உற்பத்தியை தெரிந்து கொள்ளும் வகையில் சுற்றுலா அழைத்து செல்லப்படுவர். சிறுதானிய உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு விருது, நீர் நிலை சீரமைப்பு, மரபு விதை பரவலாக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கூறினார்.
நடிகர் கார்த்தி நன்றி :
இந்த திட்டங்களுக்கு நடிகர் கார்த்தி தனது டிவிட்டர் பக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், அமைச்சர் பன்னீர்செல்வத்திற்கும் நன்றி தெரிவித்து டிவீட் செய்துஇருந்தார் . மேலும், சிறுதானியங்களில் இருந்து அரிசியை பிரித்தெடுக்க போதுமான இயந்திரங்கள் தமிழகத்தில் இல்லை என்றும்,
கோரிக்கை :
செயல்பாட்டில் இருக்கும் இயந்திரங்கள் பழுதாகிவிட்டால் அதனை சரிசெய்யும் வசதியும் போதுமானதாக இல்லை என்றும் அதனை நிவர்த்தி செய்ய வேண்டும் என நடிகர் கார்த்தி அறிக்கை வாயிலாக நன்றி தெரிவித்து கோரிக்கைகளையும் முன் வைத்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் :
இதற்கு பதில் அளிக்கும் விதமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், உழவர் நலன் காக்க செயலாற்றும் உங்களை போன்றவர்களின் பாராட்டுகளே எங்களுக்கு ஊக்கம் தருகிறது. உங்கள் கருத்துகளைக் கவனத்தில் கொண்டிருக்கிறோம். பாராட்டுக்கு நன்றி எனச் ‘சொல்ல மாட்டேன்’ என குறிப்பிட்டு, இன்னும் பல திட்டங்கள் தீட்டி உழவர் முகத்தில் மகிழ்ச்சி காண ‘செயலாற்றுவோம்’ என பதிவிட்டுள்ளார்.
அன்பின் @Karthi_Offl, உழவர் நலன் காக்கச் செயலாற்றும் உங்களைப் போன்றவர்களின் பாராட்டுகளே எங்களுக்கு ஊக்கம்!
உங்கள் கருத்துகளைக் கவனத்தில் கொண்டிருக்கிறோம்.
பாராட்டுக்கு நன்றி எனச் ‘சொல்ல மாட்டேன்’; இன்னும் பல திட்டங்கள் தீட்டி உழவர் முகத்தில் மகிழ்ச்சி காண ‘செயலாற்றுவோம்’! https://t.co/9uusQyBWpz
— M.K.Stalin (@mkstalin) March 22, 2023