ஆன்லைன் தடை சட்ட மசோதா இன்று சட்டப்பேரவையில் முதல்வர் மீண்டும் தாக்கல்.!
தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் ஸ்டாலின் மீண்டும் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை தாக்கல் செய்கிறார்.
தமிழக ஆளுநர் ரவி, விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பிய ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை, முதல்வர் ஸ்டாலின் இன்று மீண்டும் சட்டசபையில் தாக்கல் செய்கிறார். ஆன்லைன் சூதாட்ட விளையாட்டால் தற்கொலைகள் அதிகரித்துக் கொண்டு வந்ததை அடுத்து, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அவசர சட்டம் இயற்ற ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.
இதன்பிறகு கடந்த அக்டோபர் 19இல் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் விளக்கங்கள் கேட்டு திருப்பி அனுப்பினார். இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை நிறைவேற்ற, தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என ஆளுநர் ரவி கூறியிருந்தார்.
ஆளுநர் கேட்ட விளக்கங்களுடன் இன்று சட்டசபையில் மீண்டும் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா நிறைவேற்றப்படுகிறது.