பிரியாத என்ன…இனிமை குரலுக்கு சொந்தக்காரர் ‘விஜய் யேசுதாஸ்’ பிறந்தநாள் இன்று.!

Default Image

பாடகர் விஜய் யேசுதாஸ் இதுவரை பல்வேறு ஹிட் பாடல்களை பாடியுள்ளார். இவருடைய குரலில் வெளியான பிரியாத என்ன, காதல் வைத்து,சிலு சிலு,தாவணிபோட்ட தீபாவளி,கட்டபொம்மன் ஊர் எனக்கு, உள்ளிட்ட பாடல்கள் இன்றுவரை பலரது பேவரைட் பாடலாக இருக்கிறது.

Vijay Yesudas BDAY
Vijay Yesudas BDAY [Image Source : Google ]

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம்,கன்னடம் ஆகிய எல்லா மொழிகளிலும் விஜய் யேசுதாஸ் பல பாடல்களை பாடியுள்ளார். இவர்  பிரபல பாடகர் கே. ஜே. யேசுதாஸ் உடைய 2-வது மகனும் கூட. பாடகராக மட்டுமின்றி விஜய் யேசுதாஸ்  பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக மாரி  படத்தில் தனுஷிற்கு வில்லனாக நடித்திருந்தார்.

Vijay Yesudas HBD
Vijay Yesudas HBD [Image Source : Google ]

இந்நிலையில், இன்று  விஜய் யேசுதாஸ்  தனது 54-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.  இதனையடுத்து, அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை இணையதள வாயிலாகவும் நேரில் சந்தித்தும் தெரிவித்து வருகிறார்கள். இதனை, முன்னிட்டு அவருடைய பெயர் தான் எல்லா சமூக வலைத்தளங்களிலும் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

Vijay Yesudas
Vijay Yesudas [Image Source : Google ]

மேலும், பாடகர் விஜய் யேசுதாஸ்  2007 -ஆம் ஆண்டு ஜனவரி-21 ஆம் தேதி தர்சனாவை என்பவரை திருவனந்தபுரத்தில் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அம்மெயா என்ற மகிழும், அவ்யன் யேசுதாஸ் என்ற மகனும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்