ஜெயிலர் திரைப்படம் எப்போது வெளியாகிறது தெரியுமா..? லேட்டஸ்ட் அப்டேட் இதோ.!

Default Image

அண்ணாத்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். . இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.

nelson dilipkumar jailer
nelson dilipkumar jailer [Image Source : Google ]

இந்த திரைபடத்தில் பிரபல நடிகர்களான சிவ ராஜ்குமார், மோகன் லால், நடிகை ரம்யா கிருஷ்ணன், தமன்னா. வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

Rajinikanth Jailerteaser
Rajinikanth Jailerteaser [Image Source: Google ]

இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, ஜெயிலர் திரைப்படம் முன்னதாக தீபாவளி அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவி வந்தது.

Jailer
Jailer

ஆனால், தற்போது ஜெயிலர்  படம் வரும் ஆகஸ்ட் 15- ஆம் தேதி வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.  படத்தின் வேலைகள் முன்கூட்டியே முடிந்துவிட்டதால் படத்தை விரைவாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். அதோடு டீசரும் ஏப்ரல் 14ஆம் தேதி அன்று வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்