#Breaking : காஞ்சிபுரம் பட்டாசு ஆலையில் வெடி விபத்து..! பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு..!
காஞ்சிபுரம் அருகே உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழப்பு.
காஞ்சிபுரம் அருகே உள்ள குருவி மலையில் உள்ள பட்டாசு ஆலையில் திடிரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 15 திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த வெடிவிபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் பட்டாசு ஆலையில் மீட்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்தவர்களை போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். முன்னதாக ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் தற்பொழுது பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. அதில் 4 பேர் சம்பவ இடத்திலும் மேலும் 2 பேர் மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர்.