பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட தயார்.! – ஓபிஎஸ் உயர்நீதிமன்றத்தில் வாதம்.!
நிபந்தனைகளை நீக்கினால் அதிமுக பொதுச்செயலாளர் போட்டியில் தான் போட்டியிட தயார் என ஓபிஎஸ் உயர்நீதிமன்றத்தில் வாதம் செய்துள்ளார்.
கடந்த வருடம் ஜூலை மாதம் நடந்த அதிமுக பொதுக்குழுவானது செல்லும் எனவும், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பற்றி உயர்நீதிமன்றத்தை நடலாம் என ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பொதுக்குழு தீர்மானம் :
இதனை அடுத்து, அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை கேட்டும், அதிமுக பொதுக்குழு தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
எம்ஜிஆர் கொள்கைகள் :
இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்ற போது, ஓபிஎஸ் தரப்பில் பல்வேறு வாதங்களை முன் வைக்கப்பட்டது. கட்சியில் இருந்து தன்னை நீக்கியது கட்சி தலைவர் எம்ஜிஆர் வகுத்த கொள்கைக்கு எதிரானது என்றும், இரட்டை தலைமையை கலைக்கும் முடிவு தன்னிச்சையானது என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
போட்டியிட தயார் :
மேலும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் போட்டியில் நான் போட்டியிட தயார் எனவும், நிபந்தனைகளை மாற்றினால் தான் போட்டியிட தயார் எனவும் ஓபிஎஸ் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.
பொதுச்செயலாளர் விதிமுறை :
அதிமுக பொதுச்செயலர் தேர்தலில் போட்டியிட 10 வருட கட்சி உறுப்பினராகவும், 5 வருட கட்சி பதவியும் வகித்து இருக்க வேண்டும். 10 மாவட்ட செயலாளர்கள் முன் மொழிய வேண்டும். 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிய வேண்டும் எனவும் விதிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.