29 புதிய பாலங்கள், 1600 மின்சார பேருந்துகள்; டெல்லி பட்ஜெட்டில் அறிவிப்பு.!
29 புதிய மேம்பாலங்கள், 1600 புதிய இ-பஸ்கள் டெல்லி பட்ஜெட்டில் நிதியமைச்சர் கைலாஷ் கெலோட் அறிவித்தார்.
டெல்லி மாநில பட்ஜெட் இன்று சட்டசபையில் நிதியமைச்சர் கைலாஷ் கெலோட் அவர்களால் தாக்கல் செய்யப்படுகிறது. டெல்லி அரசாங்கத்தின் பட்ஜெட்டுக்கு உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்த ஒரு நாளுக்குப் பிறகு, அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசாங்கம் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறது.
முன்னதாக மத்திய உள்துறை அமைச்சகம் டெல்லி அரசின் பட்ஜெட்டில் சில விளக்கங்கள் கேட்டு திருப்பி அனுப்பியது, பிறகு விளக்கங்கள் தொடர்பாக பட்ஜெட்டை மீண்டும் சமர்ப்பிக்குமாறு கெஜ்ரிவால் அரசாங்கத்திடம் உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டது. இதனையடுத்து தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் நிதியமைச்சர் கைலாஷ் கெலோட் தனது உரையில் முக்கிய அறிவிப்புகளை அறிவித்து வருகிறார்.
இதன்படி இந்த அறிவிப்பில் 29 புதிய மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன, மற்றும் 1,600 மின்சார பேருந்துகள் (இ-பஸ்கள்) 2023 இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தேசிய தலைநகரில் சாலைகளை சீரமைக்க சுமார் ரூ.19,400 கோடி நிதி ஒதுக்கப்படும் என்றும் நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.