கலைஞர் நூற்றாண்டு விழா.! ஓராண்டு விழா.! 1 கோடி புதிய தொண்டர்கள்… திமுக தீர்மானம்.!
கலைஞர் நூறாவது பிறந்தநாள் வருவதை ஒட்டி அதனை பிரமாண்டமாக ஒரு வருடம் முழுக்க கொண்டாட திமுக முடிவெடுத்துள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாள் ஜூன் 3ஆம் தேதி கொண்டாடபடுகிறது. இதனை ஆண்டு தோறும் திமுக தொண்டர்கள் கோலாகலமாக கொண்டாடி வருவது வழக்கம்.
கலைஞர் நூற்றாண்டு விழா :
இந்தாண்டு கலைஞர் கருணாநிதியின் 100வது பிறந்தநாள் விழா. இதனை கலைஞர் நூற்றாண்டு விழாவாக கொண்டாட திமுக தொண்டர்கள் முடிவு எடுத்துள்ளனர். மேலும் அதனை இந்தாண்டு முழுக்க கொண்டாட தீர்மானித்து உள்ளனராம்.
1 கோடி தொண்டர்கள் :
அதாவது, வரும் ஜூன் 3 முதல் அடுத்தாண்டு ஜூன் வரையில் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு ஏப்ரல் 3 தொடங்கி ஜூன் 3க்குள் 2 மாதத்தில் 1 கோடி புதிய தொண்டர்களை திமுகவில் இணைக்கவும் இன்று நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.