ஓரினச்சேர்க்கைக்கு மரண தண்டனை; புதிய மசோதா நிறைவேற்றம்.!
உகாண்டாவில் ஓரினச்சேர்க்கைக்கு மரண தண்டனை விதிக்கும் புதிய மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
உகாண்டா நாட்டில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவோர்களை (LGBTQ) சட்டப்படி குற்றம் என அடையாளப்படுத்துவதை, அந்நாடு புதிய மசோதா மூலம் நிறைவேற்றியுள்ளது. உகாண்டாவின் நாடாளுமன்றம் LGBTQ வைக் குற்றமாக்கும் மசோதாவை நிறைவேற்றியது.
ஓரினச்சேர்க்கையை ஊக்குவிப்பது மற்றும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவதற்கான சதித்திட்டத்தை தடை செய்யும் இந்த புதிய மசோதா, மோசமான ஓரினச்சேர்க்கைக்கு மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கும் படி மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
மோசமான ஓரினச்சேர்க்கை என்பது 18வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் எச்.ஐ.வி பாதிக்கப்பட்டவர்களுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது சட்டப்படி குற்றமாகிறது.