வெளிமாநில தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக வதந்தி.! பீகார் சென்று கைது செய்த போலீசார்.!
வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய பீகாரை சேர்ந்த நபரை பீகார் சென்று தமிழக போலீசார் கைது செய்தனர்.
சில வாரங்களுக்கு முன்னர் தமிழகத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும், சிலர் ஒரு படி மேலே சென்று வெளிமாநில தொழிலாளர்கள் கொலை செய்யபடுவதாகவும் வதந்திகளை பரப்பினர். ஹோலி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்பர்களை குறிப்பிட்டு அவர்கள் தமிழகத்தில் இருந்து வெளியேறுகிறார்கள் என வந்ததியும் பரப்பினர்.
இந்த வதந்திகள் பரவியதை அடுத்து அரசு துரித நடவடிக்கை எடுத்து, அரசு அதிகாரிகள், காவல்துறையினர் உதவியுடன் வெளிமாநில தொழிலாளர்கள் இங்கு பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று உறுதிப்படுத்தியும், திட்டமிட்டு சிலர் வதந்தி பரப்பியதாக பலர் கைது செய்யப்பட்டும் வருகின்றனர்.
அப்படி தமிழகத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் சிலர் கொல்லப்பட்டதாக வதந்தி பரப்பிய பீகாரைச் சேர்ந்த உபேந்திர ஷானி என்பவரை தமிழக காவல்துறையினர் பீகார் சென்று கைது சென்றுள்ளனர்.
வெளிமாநில தொழிலாளர் கொலை என வதந்தி பரப்பிவிட்டு, பீகாரின் ரத்வாரா பகுதியில் தலைமறைவாக இருந்த அவரை தமிழக தனிப்படை போலீசார் கைது செய்து திருப்பூர்சிறையில் அடைத்தனர்.