UPvsDC : விறுவிறுப்பான போட்டி..! டெல்லி கேபிடல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
டெல்லி கேபிடல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் யுபி வாரியர்ஸ் அணியை வென்றது.
மகளிர் ஐபிஎல் தொடரின் 20-வது போட்டியில் யுபி வாரியர்ஸ் பெண்கள் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் பெண்கள் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி, யுபி வாரியர்ஸ் அணிக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய யுபி வாரியர்ஸ் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் எடுத்துள்ளது.
139 ரன்கள் என்ற இலக்கில் முதலில் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணியின் மெக் லானிங் – ஷஃபாலி வர்மா ஜோடி 56 ரன்கள் குவித்தது. மெக் லானிங், ஷஃபாலி வர்மா ஆட்டமிழந்த நிலையில் மரிசான் கேப் மற்றும் ஆலிஸ் கேப்ஸி அணியை முன்னோக்கி நகர்த்தினார். ஆலிஸ் கேப்ஸி ஆட்டமிழந்த நிலையில் தனது அட்டகாசமான பேட்டிங்கால் மரிசான் கேப் இறுதிவரை நின்று அணியை வெற்றி பெற வைத்தார்.
17.5 ஓவர்களில் 142 ரன்களை அடித்த டெல்லி கேபிடல்ஸ் அணி, 5 விக்கெட்டை இழந்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் யுபி வாரியர்ஸ் அணியை வெற்றி பெற்றது. டெல்லி கேபிடல்ஸ் அணியில் அதிகபட்சமாக மெக் லானிங் 39 ரன்களும், ஆலிஸ் கேப்ஸி 34 ரன்களும், மரிசான் கேப் 34* ரன்களும், ஷஃபாலி வர்மா 21 ரன்களும் குவித்துள்ளனர். யுபி வாரியர்ஸ் அணியில் ஷப்னிம் இஸ்மாயில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த போட்டியின் சிறந்த வீராங்கனையாக ஆலிஸ் கேப்ஸி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.