உற்சாகத்தில் முதலீட்டாளர்கள்..! கடும் வீழ்ச்சிக்கு பிறகு ஏற்றம் கண்ட சென்செக்ஸ்..!
பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 445 புள்ளிகள் அதிகரித்து 58,074 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,107 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களாக கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றம் கண்டுள்ளது. இன்றைய வர்த்தக நாளில் தொடக்கத்திலேயே 57,963 புள்ளிகள் எனத் சென்செக்ஸ் ஏற்றத்துடன் தொடங்கியது.
வர்த்தக நாளின் முடிவில் மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 445 புள்ளிகள் அல்லது 0.77% என அதிகரித்து 58,074 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 119.10 புள்ளிகள் அல்லது 0.70% அதிகரித்து 17,107 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 57,628 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 16,988 ஆகவும் நிறைவடைந்தது.