தொடர் அமளியால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு.!
தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை 7 ஆவது நாளாக இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 11 மணிக்கு தொடங்கப்பட்ட மாநிலங்களவை கடும் அமளியால் இன்று மதியம் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதற்கு முன்னர், 11.30 மணிக்கு அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் கூட்டத்துக்கு ராஜ்யசபா தலைவர் ஜகதீப் தன்கர் அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில், இன்று காலை 11.30 மணிக்கு ராஜ்யசபா தலைவர் ஜகதீப் தன்கர், சபையை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசிப்பதற்காக அழைத்த கூட்டத்தில், BJP, YSRCP மற்றும் TDP தவிர்த்து மற்ற அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை. மேலும், தொடர் அமளி காரணமாககாரணமாக மாநிலங்களவை 7 ஆவது நாளாக இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், லோக்சபா மீண்டும் மார்ச் 23ம் தேதி காலை 11 மணிக்கு கூட்டுவதற்காக ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையில், அதானி விவகாரத்தை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கக்கோரி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற முதல் வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.
பட்ஜெட் தொடர்பான ஆலோசனை கூட்டம் கடந்த வாரம் திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் துவங்கியது. அப்பொழுதே, எதிர்க்கட்சியினர் மற்றும் ஆளும் கட்சியினர் இடையே தொடர் அமளி ஏற்பட்டதால் நேற்றும் நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கியது. இதற்கிடையில், மாநிலங்களவை தொடர்ந்து இன்றுடன் 7-வது நாளாக எந்த விவாதமும் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.