Monday, June 3, 2024

1000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்த ‘பதான்’.! ஓடிடியில் எப்போது வெளியாகிறது தெரியுமா..?

ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் திரைப்படம் பாலிவுட் சினிமாவிற்கே மிகப்பெரிய வெற்றியை கொடுத்துவிட்டது என்றே கூறலாம். அந்த அளவிற்கு படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வெற்றியை பெற்றது. இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோன் நடித்திருந்தார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 1,048.30 கோடிகள் வசூல் செய்துள்ளது. இந்தியாவில் மட்டுமே படம் 656 கோடிகள் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்த இந்த படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்தார்கள்.

இந்த நிலையில், தற்போது அதற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பதான் திரைப்படம் நாளை (22.03.2023) தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழியைல் அமேசான் பிரேம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Jawan
Jawan [Image Source : Google ]

மேலும், பதான் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ஷாருக்கான் அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் வரும் ஜூன் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES